திருப்பத்தூர் அருகே துணிக்கடை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு


திருப்பத்தூர் அருகே துணிக்கடை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 21 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே துணிக்கடை ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள ஆதியூரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 72). இவர் திருப்பத்தூரில் உள்ள தனியார் துணிக்கடையில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அம்சவேணி. இவர்களுக்கு சொந்தமாக 2 வீடுகள் அருகருகே உள்ளது.

நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று தங்கவேலு, அம்சவேணி தூங்கினர். பின்னர் வழக்கம் போல் நேற்று காலை வீட்டிற்கு வந்தனர். அங்கு வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த தங்கவேலு வீட்டின் அறைக்குள் சென்று பார்த்தார்.

அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தங்கவேலு திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story