சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும் - கராத்தே தியாகராஜன் கோரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கராத்தே தியாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளையொட்டி, சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை மாநகராட்சிக்குள் 16 எம்.எல்.ஏ. தொகுதிகள் 155 வார்டுகள் என்று இருந்த காலக்கட்டத்தில் ஒரு சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தார். மா.சுப்பிரமணியன் மேயராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் சென்னை மாநகராட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகள் திருத்தியமைக்கப்பட்டு 22 தொகுதிகள் உருவாக்கப்பட்டன. அதேபோன்று, 155 வார்டுகள் திருத்தப்பட்டு 200 வார்டுகளாக உருவாக்கப்பட்டன. இது தொடர்பான தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
அந்த காலக்கட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் என்னிடம், “நான் மத்திய உள்துறை மந்திரியாக இருந்த காலக்கட்டத்தில் டெல்லி மாநகராட்சியை மூன்றாக பிரித்து நிர்வாகத்தை சீரமைத்து கொடுத்தேன். அதேபோல, சென்னை மாநகராட்சியையும் மூன்றாக பிரித்து நிர்வாக நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்” என்றார்.
அவரின் இந்த வழிகாட்டுதலின்படி, இந்த தகவல்களை அப்போதைய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விளக்கி கூறினேன். ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததின் பேரில் இந்த யோசனையை தெரிவிப்பதாக முக.ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அதன்படி, இப்போது ராஜீவ்காந்தியின் பிறந்த நாளில் பெருநகர சென்னை மாநகராட்சியை மூன்றாக பிரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story