வானவில் : வியோமி ஹாட் வாட்டர் மெஷின்
மனிதர்களுக்கு பெரும்பாலான நோய்கள் காற்று மற்றும் தண்ணீரால்தான் பரவுகின்றன. சுத்தமான காற்றும், மாசில்லாத குடிநீரும் ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாகக் கருதப்படுகின்றன.
குடிநீர் பெரும்பாலும் காய்ச்சி வடிகட்டியதாக இருந்தால் நல்லது. பெரும்பாலும் மிதமான சூட்டில் குடிநீரை பருகுவதையே மருத்துவர்கள் சரியானது என்கின்றனர். அனைத்து வயதுப் பிரிவினருக்கும் சூடான குடிநீரே பரிந்துரைக்கப்படுகிறது. அந்த வகையில் சூடான குடிநீரை அளிக்கும் ஹாட் வாட்டர் மெஷினை வியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் வியோமி. இந்நிறுவனம் சுத்தமான குடிநீரை சூடாக அளிக்கும் வகையிலான கருவியை வடிவமைத்துள்ளது. சுவற்றிலோ அல்லது டேபிள் மீதோ வைக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் நானோ உள்பூச்சு கொண்டது. இதனால் குடிநீரின் வெப்ப நிலையை நீண்ட நேரம் பாதுகாக்கும். இந்த கருவியில் மூன்று வித வெப்பநிலையில் குடிநீரை சூடுபடுத்த முடியும்.
சாதாரண கொதி நிலை, பருகுவதற்கு ஏற்ற சூடு, கொதிக்கும் நிலை என மூன்று நிலைகளில் தண்ணீரை சூடுபடுத்தும். இதற்கு வசதியாக முன்புறத்தில் தொடு திரை உள்ளது. இதில் தண்ணீரை சூடு படுத்துவதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது. அமெரிக்காவின் என்.எஸ்.எப். மையம் இதற்கு சான்று அளித்து உள்ளது.
இதில் உள்ள புற ஊதாக் கதிர்கள் நீரில் கலந்துள்ள கிருமிகளை முற்றிலுமாக அழித்துவிடும். மேலும் பொதுவாக குழாயில்தான் பெருமளவில் கிருமிகள் தங்கிவிடுகின்றன. அதைப் போக்கும் வகையில் இதன் தண்ணீர் குழாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.18,000. சுகாதாரம் விரும்புவோரின் தேர்வாக இது நிச்சயம் இருக்கும்.
Related Tags :
Next Story