வானவில் : அலெக்சாவுடன் இணைந்த சோனி ஸ்பீக்கர்ஸ்


வானவில் : அலெக்சாவுடன் இணைந்த சோனி ஸ்பீக்கர்ஸ்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:00 PM IST (Updated: 21 Aug 2019 4:00 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் சோனி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்.ஆர்.எஸ்.எக்ஸ்.பி402. எம் என்ற பெயரிலான இந்த ஸ்பீக்கரில் அமேசானின் ஸ்மார்ட் அசிஸ்டென்டான அலெக்ஸா உள்ளடாக (பில்ட் இன்) இடம்பெற்றுள்ளது. இதில் உள்ள சார்ஜபிள் பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 12 மணி நேரம் செயல்படும் வகையில் சக்தி மிகுந்தது. இதன் விலை சுமார் ரூ.24,990 ஆகும்.

இது அனைத்து சோனி விற்பனையகங்களிலும் கிடைக்கும். முன்னணி விற்பனையகங்கள் மற்றும் ஆன்லைன் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட்டிலும் இதை வாங்க முடியும். அதிர்வைத் தாங்கும் வகையிலும், எளிதில் துருப்பிடிக்காத தன்மை கொண்டதாகவும் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனுடன் அதிக சக்தி வாய்ந்த ஸ்பீக்கர்களையும் இணைத்துக் கொள்ள முடியும். சோனியின் புதிய வரவான ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்திய சந்தையில் பெருமளவு வரவேற்பைப் பெறும் என்றே தெரிகிறது.

Next Story