வானவில் : போர்ட்ரானிக்ஸ் போர்ட்டபிள் ஸ்பீக்கர்
மின்னணு பொருள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான போர்ட்டபிள் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
கண்கவர் வண்ணங்களில் (கருப்பு, நீலம், சிவப்பு) இது வந்துள்ளது. புளூடூத் வி5.0 இணைப்பு வசதி கொண்டது. இதில் பில்ட் இன் மைக்ரோபோன் உள்ளது.
இதனால் குரல் வழி அழைப்புகளுக்கு இதன் மூலமும் பதில் அளிக்க முடியும். இதன் எடை 266 கிராம் மட்டுமே. எளிதில் தூசி படியாத அளவுக்கு மேற்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. எப்.எம். ரேடியோ, யு.எஸ்.பி. வசதி கொண்டது. இதில் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.
இதனால் ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணி நேரம் வரை இதில் பாடல்களைக் கேட்டு மகிழ முடியும். இதன் விலை ரூ.1,999. ஆன்லைன் ஸ்டோர் மற்றும் போர்ட்ரானிக்ஸ் இணையதளத்திலும் ஆர்டர் செய்து இதை வாங்க முடியும்.
Related Tags :
Next Story