வானவில் : அறிமுகமானது ஹானரின் ஸ்மார்ட் டி.வி.கள்


வானவில் : அறிமுகமானது ஹானரின் ஸ்மார்ட் டி.வி.கள்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:20 PM IST (Updated: 21 Aug 2019 4:20 PM IST)
t-max-icont-min-icon

ஹானர் நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனம் ஹூயாவெய். இந்நிறுவனத் தயாரிப்புகள் சர்வதேச அளவில் பிரபலமானது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் ஹானர். இந்நிறுவனம் இரண்டு ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. ஹூயாவெய் நிறுவனம் உருவாக்கிய இயங்குதளம் ஹார்மனி. இந்த இயங்குதளத்தை ஹானர் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் டி.வி.யில் பயன்படுத்தி அறிமுகம் செய்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மாற்றாக இந்நிறுவனம் தனது சொந்த இயங்குதளத்தை டி.வி.யில் புகுத்தி அதை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரண்டு மாடலுமே 55 அங்குல திரையைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.க்களாகும். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நுட்பம் உள்ளதால் அறையில் நிலவும் வெளிச்சத்துக்கேற்ப இதன் பிரகாசமும் அமையும். 2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. நினைவக வசதி கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.38 ஆயிரமாகும். 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவக வசதி கொண்ட மாடலின் விலை ரூ.48 ஆயிரமாகும். இந்நிறுவனம் தயாரித்த மூன்று சிப்செட்கள் இந்த டி.வி.யில் உள்ளன.

ஹோங்கூ 818 இன்டெலிஜென்ட் டிஸ்பிளே சிப்செட், ஏ.ஐ. கேமரா, என்.பி.யு. சிப்செட் மற்றும் ஹைசிலிக்கான் ஹை1103 வை-பை சிப்செட் உள்ளன. இரண்டு டி.வி.யிலும் பாப்அப் கேமரா உள்ளது. தேவைப்படும்போது இதில் புகைப்படம் எடுத்து டி.வி.யில் பார்த்துக் கொள்ளலாம்.

Next Story