திருப்பூரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது


திருப்பூரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Aug 2019 4:00 AM IST (Updated: 21 Aug 2019 6:59 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வீரபாண்டி,

திருப்பூர்– காங்கேயம் ரோடு முத்தணம்பாளையம் பகுதியை சேர்ந்த 33 வயது உடைய ஒருவர் லாரி டிரைவராக இருந்து வருகிறார். இவருடைய வீட்டில் இவருடைய உறவினரான பெண் ஒருவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட தனது மகளான 7–ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை கொண்டு வந்து விட்டு வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் வேலை முடிந்ததும் அந்த பெண் தனது மகளை அழைத்து செல்ல சென்றுள்ளார். அப்போது அந்த மாணவி அங்கு அழுது கொண்டிருந்தாள். இது குறித்து மாணவியிடம் அந்த பெண் விசாரித்தபோது, லாரி டிரைவர், தன்னிடம் பாலியல் ரீதியாக உணர்வுகளை தூண்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளாள். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், திருப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

 புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் லாரி டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் லாரி, டிரைவர் திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் நிற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று லாரி டிரைவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story