விருதுநகர் நகராட்சியில் ரூ.100 கோடியிலான திட்டப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலை - நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகர் நகராட்சியில் நூற்றாண்டு நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100 கோடியிலான திட்டப்பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளதால் நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி நூற்றாண்டை நிறைவு செய்ததையொட்டி கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா நகராட்சி பகுதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவதற்காக ரூ.25 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கீடு செய்து தந்தார்.
இந்த நிதியின் மூலம் நகராட்சி பகுதியில் சாலை சீரமைப்பு, குடிநீர் வினியோக மேம்பாடு உள்ளிட்ட பல திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோது தேர்ந்தேடுக்கப்பட்ட நகராட்சி குழு இருந்ததால் சாலை சீரமைப்பு மற்றும் பழைய பஸ் நிலைய புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகள் ரூ.14 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது. மேலும், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட கட்டுமான பணிகள், பூங்கா சீரமைப்பு பணி உள்ளிட்ட பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி குழுவின் பதவி காலம் முடிவடைந்து விட்டதால் அதிகாரிகள் நிர்வாகத்தில் நகராட்சி செயல்பட தொடங்கியது.
இந்தநிலையில் நகராட்சி பகுதியில் குடிநீர் வினியோக மேம்பாட்டிற்கு அவசியமான 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டு, 2 குடிநீர் தொட்டிகள் முடிவடைந்த நிலையில் பயன்பாட்டிற்கு வராத நிலையிலேயே உள்ளது.
நாராயணம்மடம் தெருவில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க பூமிபூஜை போடப்பட்ட நிலையிலேயே இடப்பற்றாக்குறை காரணமாக அத்திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. நகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டபோதிலும் புதிய கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது. பூங்கா சீரமைப்பு பணி அரைகுறையாக முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
நகராட்சி பகுதியின் உள்கட்டமைப்பு வசதிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அதிகாரிகள் 4 ஆண்டுகளாகியும் திட்டப்பணியை முடிக்காமல் பாராமுகமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக திட்டப்பணிகள் முடக்கம் அடையும் நிலை ஏற்படும். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், திட்டப்பணிகள் முடியாமல் உள்ளது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
நகராட்சிகளின் மண்டல இயக்குனரும் அவ்வப்போது நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்வுக்கு வந்து சென்றாலும், நூற்றாண்டு திட்ட பணிகள் முடியாமல் உள்ளதை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று தெரியவில்லை.
எனவே நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் இந்த பிரச்சினையில் தலையிட்டு திட்ட பணிகளை முழுமையாக முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட 3-வது மேல்நிலை குடிநீர் தொட்டியையும் வேறு இடத்தில் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.
உள்ளாட்சி தேர்தல் வரும் முன்பு இத்திட்ட பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படுவதே அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நல்ல பெயரை பெற்று தரும்.

Related Tags :
Next Story