ராமேசுவரம் பகுதியில் வசதி இல்லாததால் வெளியிடங்களில் நிறுத்தப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் - குந்துகாலில் துறைமுகம் அமைக்க கோரிக்கை
ராமேசுவரம் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்த வசதிஇல்லாததால் அவை வெளியிடங்களில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் குந்துகாலில் துறைமுகம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்திற்காக மத்திய-மாநில அரசுகள் சார்பில் ரூ.1,000 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி படகு கேட்டு மீன்வளத்துறையினரிடம் விண்ணப்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து கொச்சி, காரைக்கால், நாகப்பட்டினம், நாகர்கோவில் போன்ற ஊர்களில் மீன்பிடி படகுகள் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ராமேசுவரத்தில் மட்டும் இதுவரை 6 ஆழ்கடல் படகுகள் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. படகுகள் ஒப்படைக்கப்பட்டு விட்டாலும் ராமேசுவரம் பகுதியில் இதனை நிறுத்துவதற்கு துறைமுக வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் இந்த படகுகள் கொச்சி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்று வருகின்றன. ஒரே ஒரு படகு மட்டும் ராமேசுவரம் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்று வருகிறது.
இதுபற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சேசுராஜா கூறியதாவது:- இலங்கை கடற்படை பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காகவே தமிழகத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் செயல்படுத்தியுள்ளன. ஆழ்கடல் மீன்பிடி படகு கேட்டு ராமேசுவரத்தில் 150 பேரும், மாவட்டம் முழுவதும் 300 மீனவர்களும் மீன்துறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்னர். ஒரு படகு வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.40 லட்சமும், மாநில அரசு ரூ.16 லட்சமும் வழங்குகிறது. இதுதவிர வங்கி கடனாக ரூ.16 லட்சம் அளிக்கப்படுகிறது. மீனவர்கள் பங்களிப்பாக ரூ.8 லட்சம் செலுத்த வேண்டும். இதுதவிர வலை உள்ளிட்ட இதர செலவுகளை சேர்த்தால் ஒரு படகிற்கு மட்டும் ரூ.1 கோடியே 10 லட்சம் வரையிலும் செலவாகிறது. இதுவரையிலும் ராமேசுவரம் பகுதிக்கு 6 படகுகள் வந்துள்ளன. அவற்றை இங்கு நிறுத்துவதற்கு வசதியில்லை. இதனால் நாகப்பட்டினம் பகுதியில் 3 படகும், கொச்சியில் இருந்து 2 படகும் மீன்பிடிக்க சென்று வருகின்றன. ஒரு படகு மட்டுமே ராமேசுவரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணிகள் முடிந்தாலும் இந்த துறைமுகத்தில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலும் 3 மாதங்கள் மட்டும் தான் மீன்பிடி படகுகளை நிறுத்த முடியும். மற்ற மாதங்களில் பலத்த காற்று மற்றும் கடல் அலைகளின் வேகத்தால் இந்த துறைமுகத்தில் படகுகளை நிறுத்து முடியாது. அப்படியே நிறுத்தினாலும் அந்த படகுகள் முழுமையாக சேதமடைந்து விடும். பாம்பன் குந்துகால் கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகத்தை தூண்டில் வளைவாக கட்டித்தந்தால் மட்டும்தான் இங்கு மீன்பிடி படகுகளை நிறுத்த முடியும். தூண்டில் வளைவு இல்லாமல் துறைமுகம் கட்டினால் மீனவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது. ஆழ்கடல் மீன்பிடி படகில் 10 பேர் வரையிலும் மீன் பிடிக்க செல்வதுடன் 10 முதல் 15 நாட்கள் வரையிலும் படகிலேயே தங்கியிருந்து மீன்பிடித்து வருவார்கள்.
குறிப்பாக சூரை மீன்களை எதிர்பார்த்து தான் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வர். ஆழ்கடல் படகில் ஒருமுறை மட்டும் மீன் பிடிக்க செல்ல மட்டும் ஐஸ்கட்டி, டீசல், மீனவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் சேர்த்தால் ரூ.2½ லட்சம் வரையிலும் செலவாகும். ஆழ்கடல் படகுகள் வாங்க அதிக செலவாவதால் மீனவர்கள் மத்தியில் முழுமையான ஆர்வம் இல்லை. ஒரு படகிற்கான செலவு ரூ.1 கோடிக்கு மேல் தாண்டுவதாலும், அதிக முதலீடு என்பதாலும் ராமேசுவரத்தில் ஆழ்கடல் படகுகளை நிறுத்த துறைமுகம் வசதி இல்லாததாலும் மீனவர்கள் யாரும் இந்த திட்டத்தில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. எனவே ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தம் வகையில் 2 மீனவர்களுக்கு ஒரு படகு என மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும் என ஒட்டுமொத்த மீனவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story