வேப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்து; 3 பேர் படுகாயம்
சென்னை வேப்பேரி மின்வாரிய அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை,
சென்னை வேப்பேரியில், போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
மின்வாரிய உதவி இயக்குனர் சுரேஷ், போர்மென் லாரன்ஸ் மற்றும் ஊழியர் பரணி ஆகியோர் டிரான்ஸ்பார்மர்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த ஒரு டிரான்ஸ்பார்மரை திறக்கும்போது, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
இதில் உதவி இயக்குனர் சுரேஷ், போர்மென் லாரன்ஸ் மற்றும் பரணி ஆகியோரது உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்களது தலை முடி மற்றும் உடலில் சில பகுதிகள் தீயில் கருகியது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
வலியால் அலறி அடித்து வெளியே ஓடி வந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ பரவாமல் தடுக்க தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் எழும்பூர் மற்றும் வேப்பேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சில மணி நேரத்துக்கு பிறகு மின்கசிவு சரி செய்யப்பட்டு மீண்டும் மின்வினியோகம் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story