மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
மயான பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று கடம்பத்தூர், கசவநல்லாத்தூர் பகுதியில் இருந்து திரளான முஸ்லிம்கள் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கடம்பத்தூர், கசவநல்லாத்தூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் எங்களுக்கு சொந்தமான மயானம் உள்ளது. இறப்பு ஏற்படும் சமயங்களில் இறந்தவர்களின் உடலை இன்றுவரை அந்த மயானத்தில்தான் அடக்கம் செய்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் சிலர் மயானப்பாதையை ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் இறந்தவரின் உடலை கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கசவநல்லாத்தூர் பகுதியில் மயானத்திற்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும் என கலெக்டரிடம் முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Tags :
Next Story