குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
திருக்கனூர் அருகே உள்ள கிராம மக்கள் தங்களுக்கு குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருக்கனூர்,
திருக்கனூர் அருகே உள்ள குமராப்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுஇருந்தது. 3 ஆண்டுகள் ஆகியும் இந்த குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. மேலும் இப்பகுதியில் குடிநீர் சவுடு கலந்த நீராகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறி பொது மக்கள் குமராப்பாளையம் மெயின் ரோட்டில் பானைகளை உடைத்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கனூர் போலீசார் மற்றும் டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.மேலும் நீர் தேக்க தொட்டிக்கு ஜெனரேட்டர் வசதி அமைக்க வேண்டும். நீர் தேக்க தொட்டியை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும், சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்கள்.
இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொது மக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story