மூலக்குளத்தில் இருந்து வில்லியனூர் வரை தனியார் பஸ்சில் பயணம் செய்து சப்-கலெக்டர் அதிரடி ஆய்வு


மூலக்குளத்தில் இருந்து வில்லியனூர் வரை தனியார் பஸ்சில் பயணம் செய்து சப்-கலெக்டர் அதிரடி ஆய்வு
x
தினத்தந்தி 22 Aug 2019 4:45 AM IST (Updated: 22 Aug 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

மூலக்குளத்தில் இருந்து வில்லியனூர் வரை தனியார் பஸ்சில் பயணம் செய்த சப்-கலெக்டர் போக்குவரத்து விதிகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

வில்லியனூர்,

புதுவையில் சமீப காலமாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.குறிப்பாக பஸ்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. இதை தொடர்ந்து வில்லியனூர் சப்-கலெக்டர் சஸ்வத் சவுரவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தம், சாலை விதிகள், விதிகளை மீறினால் அளிக்கப்படும் தண்டனை குறித்தும் ஆலோசனை நடத்தினார்.இந்த நிலையில் நேற்று சப்-கலெக்டர் திடீரென மூலக்குளத்தில் இருந்து வில்லியனூர் வரை தனியார் பஸ்சில் பயணம் செய்து ஆய்வு செய்தார்.அவருடன் தாசில்தார் செந்தில் குமார், போக்குவரத்து சூப்பிரண்டு(மேற்கு) சுப்பிரமணியம் ஆகியோர் பயணம் செய்தனர்.

அப்போது பஸ்சில் ஓட்டுனர், மற்றும் நடத்துனர் சீருடை அணிந்துள்ளார்களா? சரியான நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகிறதா? சீரான வேகத்தில் செல்கிறார்களா? பயணிகளுக்கு சரியான பயணச்சீட்டு கொடுக்கிறார்களா? தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பானை (ஏர்ஹாரன்) பயன் படுத்துகிறார்களா? முதல் உதவி பெட்டி பஸ்ஸில் உள்ளதா? மாற்று திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு பஸ்சில் தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.

பின்னர் பயணிகளிடம் பஸ்களை வேகமாக ஓட்டுகிறார்களா? வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா? எனவும் கேட்டார். முதல் உதவி பெட்டி இல்லாத பஸ்களிலும், சீருடை அணியாத ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.காற்று ஒலிப்பானை பயன்படுத்திய ஓட்டுனர் களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story