கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு


கல்லூரி மாணவி கடத்தல் வாலிபர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Aug 2019 3:45 AM IST (Updated: 22 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

19 வயது தனியார் கல்லூரி மாணவி கடத்தியது தொடர்பாக உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவி மாயமானார். இது குறித்து மாணவியின் பெற்றோர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்துள்ளனர். அதில், தங்களின் மகளை அதே பகுதியை சேர்ந்த முனிராஜ் (வயது 30) என்பவர் திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தி சென்று விட்டதாகவும், அதற்கு 4 பேர் உடந்தையாக இருந்ததாகவும் கூறியுள்ளனர். அதன் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரித்து முனிராஜ் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story