குடிமராமத்து பணிகளை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆய்வு
கொல்லிமலையில் குடிமராமத்து பணிகளை எம்.எல்.ஏ சந்திரசேகரன் நேரில் ஆய்வு செய்து வாய்க்காலை தூர்வாருவதற்கு ஏற்பாடு செய்தார்.
சேந்தமங்கலம்,
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரியூர்நாடு ஊராட்சி மேல்கலிங்கம் கிராமத்தில் புகழ்வாய்ந்த எட்டுக்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள குட்டைக்கு நம் அருவியில் இருந்து பாய்ந்து செல்லும் வெள்ளநீர் வந்து விழும். அந்த குட்டையை ஆழப்படுத்தி நீரை அதிகளவில் சேமிக்க வேண்டி அப்பகுதி விவசாயிகள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற எம்.எல்.ஏ., எட்டுக்கை அம்மன் குட்டையில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் செல்லும் புலிக்குளம் குட்டை, ஊர்கலிங்க குட்டை, புதுவளவு குட்டை ஆகியவற்றை பார்வையிட்டு, குடி மராமத்து பணிகளை ஆய்வு செய்து அப்பகுதிகளில் செல்லும் வாய்க்காலை தூர்வாருவதற்கு ஏற்பாடு செய்தார். அப்போது முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டுக்கான பணிகளுக்கு 4 குட்டைகளுக்கும் சேர்ந்து ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளதாகவும், இதனால் அப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பாசனம் பெறும் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் சின்னதுரை, ஒன்றிய பொறியாளர் சங்கர், ஒப்பந்ததாரர் சின்னதம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக பேளுக்குறிச்சியில் 2 பஸ்களின் இயக்கத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த பஸ்கள் சேலத்தில் இருந்து சேந்தமங்கலம் வழியாக நாமக்கல்லுக்கும், ராசிபுரத்தில் இருந்து சேந்தமங்கலம் வழியாக நாமக்கல்லுக்கும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக நாமக்கல் கோட்ட மேலாளர் காங்கேயன், ராசிபுரம் கிளை மேலாளர் பாண்டியன், நாமக்கல் உதவி பொறியாளர் கவுதமன், காளப்பநாயக்கன்பட்டி அ.தி.மு.க. பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணி, சேந்தமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் ஜி.கே.வீரப்பன், பேளுக்குறிச்சி ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story