பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிர்மலா காவித் சிவசேனாவில் இணைந்தார்


பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிர்மலா காவித் சிவசேனாவில் இணைந்தார்
x
தினத்தந்தி 22 Aug 2019 4:30 AM IST (Updated: 22 Aug 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிர்மலா காவித் பதவியை ராஜினாமா செய்து விட்டு சிவசேனாவில் இணைந்தார்.

மும்பை, 

காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிர்மலா காவித் பதவியை ராஜினாமா செய்து விட்டு சிவசேனாவில் இணைந்தார்.

நிர்மலா காவித்

மராட்டிய சட்டசபைக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சிகளான பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தார். தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் சச்சின் அஹிர் சிவசேனாவில் இணைந்தார். இதேபோல எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரும் பா.ஜனதா, சிவசேனாவில் இணைந்து உள்ளனர்.

இந்த பரபரப்பான நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ.வான நிர்மலா காவித் கட்சி தாவி உள்ளார். இகாத்புரி தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார். நிர்மலா காவித் சிவசேனாவில் இணைந்ததன் மூலம் நாசிக் மாவட்டத்தில் தங்களது கட்சி வலுப்பெறும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

மாணிக்ராவ் காவித்தின் மகள்

நிர்மலா காவித் காங்கிரஸ் மூத்த தலைவரான மாணிக்ராவ் காவித்தின் மகள் ஆவார்.

தேர்தலை முன்னிட்டு இவ்வாறு தொடர்ந்து கட்சி நிர்வாகிகளும், எம்.எல்.ஏ.க்களும் ஆளும் கட்சிகளுக்கு தாவி வருவது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story