சேலத்தில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி - கிலோ ரூ.14-க்கு விற்பனை


சேலத்தில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி - கிலோ ரூ.14-க்கு விற்பனை
x
தினத்தந்தி 22 Aug 2019 3:15 AM IST (Updated: 22 Aug 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.14-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சேலம்,

சேலத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை கிலோ ரூ.25-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உழவர் சந்தைகளுக்கு ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, மேச்சேரி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவு தக்காளியை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இதனால் அதன் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. அதாவது, நேற்று உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.14 முதல் ரூ.16 வரை விற்பனை செய்யப் பட்டது. மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.20 வரை விற்பனையானது. விலை குறைவால் பொதுமக்கள் அதிகளவு தக்காளி வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

இதேபோல் உழவர் சந்தைகளில் நேற்று பீன்ஸ் கிலோ ரூ.60-க்கும், உருளைக் கிழங்கு ரூ.22-க்கும், பீட்ரூட் ரூ.26-க்கும், கத்தரிக்காய் ரூ.20-க்கும், கேரட் ரூ.54-க்கும், சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.30-க் கும், மிளகாய் ரூ.30-க்கும், பாகற்காய் ரூ.30-க்கும், அவரை ரூ.34-க்கும், கொத்தமல்லி கட்டு ரூ.10-க்கும், புதினா கட்டு ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் உழவர் சந்தைகளுக்கு அதிகமாக கொண்டு வரப்படுகிறது. இதனால் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, வரத்து அதிகரிப்பால் மேலும் சில காய்கறிகளின் விலை குறைந்து காணப்படுகிறது’ என்றனர்.

Next Story