ப.சிதம்பரம் கைதுக்கு தேவேகவுடா அதிருப்தி ‘பழிவாங்கும் நடவடிக்கை என்பதை கவனித்தேன்’


ப.சிதம்பரம் கைதுக்கு தேவேகவுடா அதிருப்தி ‘பழிவாங்கும் நடவடிக்கை என்பதை கவனித்தேன்’
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 22 Aug 2019 11:12 PM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு தேவேகவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை கவனித்தேன் என்று அவர் கூறினார்.

பெங்களூரு, 

ப.சிதம்பரம் கைது நடவடிக்கைக்கு தேவேகவுடா அதிருப்தி தெரிவித்துள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை கவனித்தேன் என்று அவர் கூறினார்.

பழைய விவகாரம்

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை டெல்லியில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ப.சிதம்பரம் மீதான புகார் பழைய விவகாரம். அதுபற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஏன் இவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. கைது செய்யப்பட்டதின் பின்னணியில் ஏதோ இருக்க வேண்டும். அது என்ன என்று தெரியவில்லை. ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாக இருந்தபோது, தற்போது உள்துறை மந்திரியாக உள்ள அமித்ஷா கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு அழைத்தனர்

பழிக்கு பழிவாங்கும் நடவடிக்கை என்பது போல் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருவதை நான் கவனித்தேன். ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது எங்கு போய் நிற்கிறதோ, பத்திரிகை சுதந்திரம் என்ன ஆகுமோ தெரியவில்லை.

ப.சிதம்பரத்தின் மகன், 2004-ம் ஆண்டு நடந்த விவகாரத்தில் 2017-ம் ஆண்டு சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் என்னை விசாரணைக்கு அழைத்தனர். 22 முறை ஆஜரானேன், ஆனாலும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை என்று கூறியிருப்பதையும் நான் கவனித்தேன். உமேஷ்கட்டி, காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவை சந்திக்க இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆதாரமற்ற செய்திகள் குறித்து என்னிடம் கருத்து கேட்க வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story