‘கர்நாடகத்தில் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பா.ஜனதா’ தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு


‘கர்நாடகத்தில் பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்த பா.ஜனதா’ தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 22 Aug 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பா.ஜனதா பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் பா.ஜனதா பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்துள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் குற்றம்சாட்டினார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நேற்று டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பின்வாசல் வழியாக ஆட்சி

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்காவது மந்திரி பதவி கிடைக்கட்டும். ஒருவரை துணை முதல்-மந்திரியாக நியமிக்கட்டும். அவர்களுக்கு பொதுப்பணி, நிதி, போலீஸ் துறை போன்ற முக்கியமான இலாகாக்களை வழங்கட்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் தியாகத்துக்கு உரிய மரியாதையை பா.ஜனதா வழங்கட்டும்.

கர்நாடக காங்கிரசில் நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். கர்நாடகத்தில் பா.ஜனதா பின்வாசல் வழியாக ஆட்சியை பிடித்துள்ளது. கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க வேண்டுமா? அல்லது நானே தொடர வேண்டுமா? என்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.

அவசியம் எழவில்லை

கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டதால் குமாரசாமிக்கு இருந்த பெரிய கஷ்டம் தீர்ந்துவிட்டது என்று தேவேகவுடா கூறியிருப்பது சரியல்ல. அவர் அவ்வாறு கூற வேண்டிய அவசியம் எழவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. அந்த தேர்தல் அனுபவத்தை பெரிய புத்தகமாக எழுத முடியும். ஆனால் அதனால் என்ன பயன்?.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story