மதுக்கூரில் நடந்த விழாவில் ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்
மதுக்கூரில் நடந்த விழாவில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வைத்திலிங்கம் எம்.பி. பயனாளிகளுக்கு வழங்கினார்.
மதுக்கூர்,
தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணி நிறைவு விழா மற்றும் அனைத்து துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை சி.வி.சேகர் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மாதவன் வரவேற்றார்.
விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு இலவச வீட்டு மனைப்பட்டா, பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகள், விதை நெல், உரம் உள்ளிட்ட வேளாண்மை இடுபொருட்கள் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பாராட்டு
முன்னதாக அவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் குப்பைகளை சரியான முறையில் தரம்பிரிக்கும் பணிகளை மேற்கொண்ட மதுக்கூர் பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாராட்டு தெரிவித்தார். விழாவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மதுக்கூர் ஒன்றிய பால்வள தலைவர் துரை.செந்தில், பட்டுக்கோட்டை தாசில்தார் அருண்பிரகாசம், செயல் அலுவலர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குமரவடிவேல், வீரமணி, கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முகமது சரிபு, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story