விவசாய விளைநிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் கோரிக்கை
விவசாய விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ், பி.முருகன், எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தளி சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ், மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான பி.முருகன், ஓசூர் நகர தி.மு.க. பொறுப்பாளரும், ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலெக்டர் பிரபாகரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி சூளகிரி தாலுகா, தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ராயக்கோட்டை, பீர்ஜேப்பள்ளி, அளேசீபம், காமன்தொட்டி, சாமனப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களில் குழாய் கொண்டு செல்ல பெட்ரோலிய நிறுவனம் விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள்.
பெட்ரோலிய நிறுவனம் இருகூர் - தேவனகுந்தி குழாய் பதிப்பு திட்டத்தின் மூலம் நோட்டீஸ் வழங்கி உள்ளது விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தில் விவசாய விளை நிலங்களில் கொண்டு செல்ல மத்திய, மாநில அரசு அனுமதி அளிக்காமல் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் ஓரம் அரசு நிலம் அதிகமாக உள்ளதாலும், நெடுஞ்சாலை ஓரங்களில் கொண்டு செல்ல திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். எனவே, இந்த திட்டத்தை ரத்து செய்து, வேறு பாதையில் கொண்டு செல்ல புதிய திட்டத்தை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story