பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு: விவரம்கேட்டு திரண்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
விவசாய நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த திட்டம் தொடர்பான விவரங்களை கேட்டு கோரிக்கை மனு அளிக்க தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
கோவை மாவட்டம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனாங்குந்தி இடையே பெட்ரோலிய பொருட்களை குழாய்கள் மூலமாக எடுத்து செல்வதற்காக விவசாய நிலங்களில் குழாய்களை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த திட்டம் தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்குமாறு குறிப்பிட்ட விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பெரும்பாலை, சின்னம்பள்ளி, நாகாவதி அணை, அரக்காசனஅள்ளி, நாகர்கூடல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் சேலத்தை சேர்ந்த பியூஸ் மானுஸ் தலைமையில் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் பெட்ரோலிய குழாய்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தொடர்பான விவரங்கள் மற்றும் இந்த திட்டம் குறித்த விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கேட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொது தகவல் அலுவலர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தனித்தனியாக மனுஅளித்தனர்.
பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல விவசாய நிலங்களுக்கு அடியில் குழாய் பதிக்கும் திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் 4,000 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் சுற்றுப்புற சூழலையும் பாதிக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை.
பெட்ரோலிய குழாய்களை பதிக்கும் திட்டத்தை தர்மபுரி மாவட்டம் நாகாவதி அணை பகுதி மற்றும் காவிரி ஆற்றின் அருகே உள்ள கிராமங்கள் வழியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு அடியில் பெட்ரோலிய குழாய்கள் அமைக்கப்பட்டு எதிர்காலத்தில் அவற்றில் ஏதேனும் விரிசல்கள் உருவாகி பெட்ரோலிய பொருட்கள் கசிவு ஏற்பட்டால் அது நாகாவதி அணை தண்ணீரில் கலந்து காவிரி ஆற்று நீரையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அத்தகைய சூழல் ஏற்பட்டால் 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் உள்ள காவிரி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் மாசுபாடு அடையும் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த திட்டம் தொடர்பாக எங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுதொடர்பாக உரிய விவரங்களை பெறுவதற்காக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மனு அளித்து உள்ளோம். விவசாயிகளையும், சுற்றுப்புற சூழலையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

Related Tags :
Next Story