விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை


விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 2:05 AM IST)
t-max-icont-min-icon

பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.பி.மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசால் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படும் பொது விடுமுறை நாட்களில் அனைத்து வகை பள்ளிகளிலும் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது என்று கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகள், மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ., நர்சரி பிரைமரி பள்ளிகள் அனைத்தும் இதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

அரசால் அறிவிக்கப்படும் பொது விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளின் மீது அரசு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவில் குழு ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story