தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரியில் இருந்து ரூ.20 லட்சம் துணிகள் திருட்டு


தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரியில் இருந்து ரூ.20 லட்சம் துணிகள் திருட்டு
x
தினத்தந்தி 23 Aug 2019 4:15 AM IST (Updated: 23 Aug 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான துணிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அணைக்கட்டு, 

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி நேற்று முன்தினம் இரவு பார்சல் சர்வீஸ் லாரி ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. லாரியை குமார் என்பவர் ஓட்டி வந்தார். பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி அருகே லாரியை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு குமார் தூங்கினார்.

நேற்று காலை எழுந்து லாரியை பார்த்தபோது பின்பக்கத்தை உடைத்து அதில் அடுக்கி வைத்திருந்த 20 பெட்டிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. அந்த பெட்டிகளில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த துணிகள் (ஜெர்கின்கள்) இருந்தது.

இதுகுறித்து லாரி டிரைவர் குமார் பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் கூறுகையில், கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விரிஞ்சிபுரம் வரை இரவில் ஓய்வுக்காக நிறுத்தப்படும் லாரி மற்றும் வேன்களில் ஒரு கும்பல் கடந்த சில ஆண்டுகளாக கொள்ளையடித்து வருகின்றனர். போலீசார் சாலைகளில் ரோந்து பணியில் இருந்தாலும் மர்மமான முறையில் திருடர்கள் லாரியில் கொண்டு செல்லப்படும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் விழிப்புடன் செயல்பட்டால் இரவு நேரங்களில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடித்துவிடலாம் என்றனர்.

Next Story