நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்காத அதிகாரிகளின் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் மாநகராட்சி கமிஷனர் சுற்றறிக்கை

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்காத அதிகாரிகளின் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் மாநகராட்சி கமிஷனர் சுற்றறிக்கை
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்காத அதிகாரிகளின் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

மும்பை, 

நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்காத அதிகாரிகளின் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

சம்பளத்தில் பிடித்தம்

மும்பை மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேசி பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தநிலையில் அவர் தற்போது மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிவிப்பில் மாநகராட்சி திட்டப்பணிகளை முடிக்க தாமதமானால் அதிகாரிகளின் சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் திட்டப்பணிகளை முடிக்காத மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு 20 சதவீதம்

இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாநகராட்சி கமிஷனர் கடந்த வாரம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மாநகராட்சி திட்ட பணிகளில் மேற்பார்வையில் ஈடுபடும் மாநகராட்சி அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பணியை முடிக்காவிட்டால் அவர்களது சம்பளத்தில் 50 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதேபோல உரிய நேரத்திற்குள் பணியை முடிக்க தவறிய ஒப்பந்ததாரர் திட்டமதிப்பில் 20 சதவீதத்தை இழக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனரின் இந்த சுற்றறிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

Next Story