பிவண்டியில் பரிதாபம் பள்ளியின் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை


பிவண்டியில் பரிதாபம் பள்ளியின் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 23 Aug 2019 4:00 AM IST (Updated: 23 Aug 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டியில் பள்ளியின் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

தானே,

பிவண்டியில் பள்ளியின் 5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி மாணவி

தானே பிவண்டி நைய்காவ் பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி பானு நூருதின் ஷேக் (வயது 14). நேற்று முன்தினம் காலை மாணவி தேர்வு எழுதுவதற்காக வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். பள்ளியின் முதல் மாடியில் தேர்வு நடந்தது.

இந்தநிலையில், தேர்வு எழுதிய பின்னர் மாணவி 5-வது மாடிக்கு சென்றார். அப்போது மாணவி அங்கிருந்து கீழே குதித்தார். இதில் மாணவி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதை பார்த்து பள்ளி வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

காரணம் என்ன?

இதையடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாகஉயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த பிவண்டி போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் என்ன காரணத்துக்காக மாணவி தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

5-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்தது, பள்ளி வளாகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Next Story