திருமணமான ஒரு ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ.விசாரணை


திருமணமான ஒரு ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ.விசாரணை
x
தினத்தந்தி 24 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 8:16 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே திருமணமான ஒரு ஆண்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவினாசி,

பீகார் மாநிலத்தைச்சேர்ந்த சம்புதாஸ் மகள் மன்ஷாசிங் (வயது 19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரூபேஷ்குமார் (23) என்பவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் பீகாரில் இருந்து திருப்பூர் மாவட்டம் அவினாசிலிங்கம்பாளையம் வட்டம்  தந்தை பெரியார் காலனியில் வாடகை வீட்டில் தங்கி இருவரும் அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் மனிஷாசிங்கிற்கு வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று வயிற்று வலி காரணமாக வேலைக்கு செல்லாமல் மனிஷாசிங் வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது கணவர் வேலைக்கு சென்றுவிட்டு பிற்பகல் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மனிஷாசிங் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனிஷா சிங் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் ஆர்.டி.ஓ.வும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story