திருவள்ளூர் - 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு


திருவள்ளூர் -  2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு
x
தினத்தந்தி 24 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரை அடுத்த தொடுகாடு அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தொடுகாடு ஓம்நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் டயர் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் யுவராஜ் தன் மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.7 ஆயிரம் ஒரு எல்.இ.டி.டி.வி. போன்றவை திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து யுவராஜ் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மேல் ரகுநாதபுரம், சீனிவாசா நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி திவ்யபிரியா (34), தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு கீழ் தளத்தில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு மேல் தளத்தில் உள்ள வீட்டில் தூங்க சென்று விட்டனர். நேற்று காலை கீழே இறங்கி வந்து பார்த்தபோது கீழ் தளத்தில் உள்ள வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் வெள்ளி கொலுசுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருட்டு நடந்த வீட்டில் சோதனை செய்தனர். இது குறித்து மாங்காடு போலீசார் வழககுப்பதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.

Next Story