காங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை தினேஷ் குண்டுராவ் ஆதங்கம்


காங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை தினேஷ் குண்டுராவ் ஆதங்கம்
x
தினத்தந்தி 24 Aug 2019 3:30 AM IST (Updated: 23 Aug 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை என்று தினேஷ் குண்டுராவ் ஆதங்கத்துடன் கூறினார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்பது தெரியவில்லை என்று தினேஷ் குண்டுராவ் ஆதங்கத்துடன் கூறினார்.

எங்களுக்கு தெரியவில்லை

கூட்டணி அரசில் காங்கிரஸ் தொல்லை கொடுத்ததாகவும், அரசு கவிழ காங்கிரசே காரணம் என்றும் தேவேகவுடா பகிரங்கமாக கூறத்தொடங்கியுள்ளார். இதனால் கூட்டணி கட்சிகள் இடையே மோதல் வெடித்துள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி அரசு நடந்தபோது, முதல்-மந்திரியாக இருந்த குமாரசாமி கண்ணீர்விடும் சூழ்நிலை வரவில்லை. ஆனாலும் குமாரசாமி கண்ணீர்விட்டார். இது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை. கூட்டணி அரசை பாதுகாக்க சித்தராமையா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆயினும் அவருக்கு எதிராக தேவேகவுடா குற்றம்சாட்டி இருப்பது சரியல்ல.

முழு ஒத்துழைப்பு

தேவேகவுடா தொடர்ந்து பேசி வருவதால், சித்தராமையா அதற்கு பதிலளித்துள்ளார். தேவேகவுடா குற்றச்சாட்டின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. ஆட்சியை நடத்த நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினோம். எங்கள் கட்சிக்கு 80 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், ஜனதா தளம்(எஸ்) ஆட்சி நடத்த நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் இப்போது காங்கிரஸ் மீது தேவேகவுடா குற்றம்சாட்டுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்கள் ஒன்றும் அதிகாரம் இல்லாமல் எங்களுடன் கைகோர்க்கவில்லை. தேவேகவுடாவின் கருத்தால் எந்த பயனும் இல்லை. மக்கள் கூட அவரது குற்றச்சாட்டை ஏற்கமாட்டார்கள்.

இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

Next Story