ஓசூர் அருகே காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தோல்வி
ஓசூர் அருகே காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தோல்வியடைந்தது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை மற்றும் பாகலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த 2 யானைகளையும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
இதற்காக முதுமலை டாப்சிலிப் பகுதியிலிருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாரியப்பன், பரணி என்ற 2 கும்கி யானைகள் ஓசூருக்கு வரவழைக்கப்பட்டன. இதையடுத்து கெலவரப்பள்ளி அணை பகுதியில் சுற்றித் திரிந்த 2 காட்டு யானைகளையும் பேரண்டபள்ளி வனப்பகுதிக்கு விரட்டி, அங்கு கதிரேபள்ளி என்ற இடத்தில் உள்ள லேஅவுட் பகுதியில் இருந்து மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததாலும், வேறு சில காரணங்களாலும் கடந்த 3 நாட்களாக காட்டு யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மும்முரமாக தொடங்கின. வனத்துறை டாக்டர்கள், அதிகாரிகள் மேற்பார்வையில் 60-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். மேலும், பெங்களூருவில் இருந்த வந்த மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்களும் தயார் நிலையில் இருந்தனர்.
ஆனால் காட்டுக்குள் இருந்த 2 யானைகளும் வெளியே வருவதும், மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வதுமாக இருந்தன. அப்போது 7 முறை நிபுணர்கள் மயக்க ஊசி செலுத்திய போதும் குறிதப்பியது. மாலையில் அப்பகுதியில் மழை பெய்ததால் காட்டு யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி தோல்வியில் முடிந்தது. இன்றும் (சனிக்கிழமை) யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story