ஆள்மாறாட்டத்தில் தூங்கி கொண்டிருந்த சிறுவன் மீது தீ வைத்த தொழிலாளி கைது-தர்மபுரி அருகே பரபரப்பு


ஆள்மாறாட்டத்தில் தூங்கி கொண்டிருந்த சிறுவன் மீது தீ வைத்த தொழிலாளி கைது-தர்மபுரி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 24 Aug 2019 4:30 AM IST (Updated: 24 Aug 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

தூங்கி கொண்டிருந்த சிறுவன் மீது ஆள் மாறாட்டத்தால் தீ வைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி அருகே நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் இண்டூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் பெங்களூருவில் தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருடைய இளைய மகன் விஷ்ணு (வயது 14).

இவன் இண்டூரில் தனது தாயாருடன் வசித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் கட்டிலில் சிறுவன் விஷ்ணு தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த மர்ம நபர் அவனுடைய முதுகு பகுதியில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து விட்டு ஓடிவிட்டார். இதனால் அலறி துடித்த விஷ்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிறுவன் விஷ்ணு மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து இண்டூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது, மண்ணேரியை சேர்ந்த கார்த்திகேயன் (32) என்ற தொழிலாளி, விஷ்ணுவின் தாயாருடன் ஏற்பட்ட முன் விரோதத்தால் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவத்தன்று திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தது விஷ்ணுவின் தாயார் என நினைத்து விஷ்ணுவின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து உள்ளார். ஆள்மாறாட்டத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story