கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை ; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை ; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 24 Aug 2019 4:45 AM IST (Updated: 24 Aug 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம்,

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உற்சவர், சுந்தரவள்ளி தாயார், ஆண்டாள், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து பல்லக்கில் கிருஷ்ணர் கோவிலுக்குள் திருவீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி ரோட்டில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் குருவாயூரப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அதையொட்டி, தொட்டிலில் கிருஷ்ணர் உருவபொம்மையை வைத்து சிறுவர், சிறுமிகள் ஆட்டினர். மேலும் பல சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ராஜ அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதேபோல், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், பேர்லேண்ட்ஸ் வேங்கடாஜலபதி கோவில் என மாநகரில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதே போல கொங்கணா புரம் அருகே உள்ள ரெட்டிப்பட்டி கிருஷ்ண பெருமாள் கோவிலில் கிருஷ்ணர், பாமா, ருக்மணிக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதேபோல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story