கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு, நீச்சல் பழகிய போது பரிதாபம்
சேலத்தில் நீச்சல் பழகிய போது கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
சேலம்,
சேலம் கிச்சிப்பாளையம், ஓந்தப்பிள்ளை காடு, அசோக்நகர், 4-வது தெருவை சேர்ந்தவர் லியாகத்அலி. தொழிலாளி. இவரது மகன் ஷாநவாஸ் (வயது 15). இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர் ஷாநவாஸ் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பழக செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று கிருஷ்ணஜெயந்தியையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் ஷாநவாஸ் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு உள்ள கிணற்றுக்கு சென்று உள்ளார். சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் எப்போதும் குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் அந்த கிணற்றில் தற்போது அதிகம் தண்ணீர் இருந்துள்ளது.
ஷாநவாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலருடன் கிணற்றில் இறங்கி நீச்சல் பழகிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென்று தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள் ஷாநவாசை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையொட்டி அவர்கள் கிணற்றின் மேல் பகுதிக்கு வந்து ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டனர். இதைக் கேட்ட அங்கிருந்த சிலர் கிணற்றுக்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் மாணவர் ஷாநவாஸ் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சேலம் டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சிராஜ் அல்மானிஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பழகாரசாமி, ஜெயம்மோகன், பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இறங்கி மாணவரை தேடினார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு கிணற்றில் மூழ்கி இறந்து போன மாணவர் ஷாநவாஸ் உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஷாநவாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீச்சல் பழக சென்ற சிறிது நேரத்தில் கிணற்றில் மூழ்கி ஷாநவாஸ் இறந்து போன தகவல் கிடைத்த அவரது பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Related Tags :
Next Story