பர்கூர் அருகே 12-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
பர்கூர் அருகே 12-ம் நூற்றாண்டு நடுகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பர்கூர்,
பர்கூர் அருகே உள்ள சின்ன காரகுப்பம் கிராமத்தில், 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் அவருடைய ஆய்வு மாணவர்களான பாலாஜி, செல்லையா மற்றும் இளங்கலை மாணவர் பிரவீன்குமார் ஆகியோர் இதனை கண்டறிந்தனர். இது குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:-
பர்கூர் தாலுகா சின்ன காரகுப்பம் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மூசாட்டு மலை அடிவாரத்தில், மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் நடுகல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் 12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் வீரன் ஒருவன் வலது கையில் குறுக்கு வாட்டில் வாள் பிடித்த நிலையில், இடது கையில் சிறிய குத்துவாள் உள்ளது. தலையின் வலதுபுற கொண்டை அலங்காரத்துடனும், காதுகளில் வட்ட குழை, கழுத்தில் மூவட ஆபரணமும், கைகளில் தன்டை மற்றும் காப்பும் அணிந்துள்ளான். மூன்று மடிப்புகளுடன் கூடிய கச்சையை தன் இடுப்பில் கட்டியுள்ளான்.
மேலும் வீரனின் வலது புறத்தில் அவனுடைய மனைவியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அப்பெண் தன் கணவன் இறந்தவுடன் அவளும் சதி மூலம் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அப்பெண்ணானவள் சதி முத்திரை காட்டும் வகையில், தன் இடது கையில் மலர் கொத்தும், வலது கையில் மதுக்குடுவையும் வைத்துள்ளாள். வரிவடிவாக அமைந்த ஆடையும் அணிந்துள்ளாள். வீரனின் வலது கால் அருகில் நாய் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.
மேலும் நடுகல்லின் வலது பக்கம் மேல் மூலையில் நான்கு தேவலோக பெண்கள் இறந்த வீரனையும், அவனது மனைவியையும் தேவலோகம் அழைத்து செல்வது போல் காட்டப்பட்டுள்ளது. தேவலோக பெண்களின் நடுவில் உள்ள இருவர் அர்த்த பத்மாசன கோலத்தில் உள்ளனர். மேலும் மற்ற இரு பெண்கள் ஆடல் கோலத்திலும், நான்கு பேர் கைகோர்த்தும் உள்ளனர்.
தற்போது சிலைக்கல் என்று உள்ளூர் மக்களால் இந்த நடுகல் அழைக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு தீராத தலைவலி ஏற்படும்போது வீரனை வணங்கினால் தங்களுக்கு ஏற்பட்ட தலைவலி நீங்கும் என்ற ஐதீகம் இம்மக்களிடம் பலமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story