சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை-கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க உறுதுணையாக செயல்படும் நில உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகாவில் உள்ள கெலவரப்பள்ளி அணையை ஒட்டி உள்ள பகுதியில் சட்ட விரோதமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முறையான அனுமதி பெறாமல் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாமல் சாயப்பட்டறை புதிதாக அமைத்து, அதில் இருந்து வெளியேறும் சாயக் கழிவுநீரை கெலவரப்பள்ளி அணையில் வெளியேற்றுவதாக அப்பகுதி மக்களிடமிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
அதன் பேரில் அந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில், அணையை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் புதிய சாயப்பட்டறை வின்சு எந்திரங்கள் அமைத்து, கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் எடுத்து, துணிகளுக்கு சாயமேற்றிய பின் வெளியேறும் சாயக்கழிவு நீரை மீண்டும் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கெலவரப்பள்ளி அணையிலேயே குழாய்கள் மூலம் சட்ட விரோதமாக வெளியேற்றுவது கண்டறியப்பட்டது.
எனவே, இது சம்பந்தமாக உத்தரவின்படி, தமிழ்நாடு மாசு காட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமல் இயங்கி வந்த அந்த சாயப்பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், உதவி பொறியாளர்கள், ஓசூர் தாசில்தார், பாகலூர் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த அந்த சாய தொழிற்சாலையினை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள். இது போன்ற சட்ட விரோத சாயப்பட்டறைகளுக்கு வாடகைக்கு இடம் கொடுத்து, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க உறுதுணையாக செயல்படும் நில உரிமையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக் கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story