மேகமூட்டம் காரணமாக பகல், இரவு வெப்ப அளவுகள் குறையும்-ஆராய்ச்சி நிலையம் தகவல்


மேகமூட்டம் காரணமாக பகல், இரவு வெப்ப அளவுகள் குறையும்-ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

மேகமூட்டம் காரணமாக பகல், இரவு வெப்ப அளவுகள் குறையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், 27-ந் தேதி லேசான மேகமூட்டத்துடனும் வானம் காணப்படும். இன்று (சனிக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 6 மி.மீட்டரும், 27-ந் தேதி 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அடுத்த 3 நாட்களுக்கு காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்திலும், 27-ந் தேதி 6 கி.மீ. வேகத்திலும் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக இன்று முதல் 3 நாட்களுக்கு 75.2 டிகிரியாகவும், 27-ந் தேதி 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 90, 90, 90, 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக முறையே 50, 50, 50, 55 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், லேசான மழை சில பகுதிகளில் மட்டும் காணப்படும். மேகமூட்டம் காரணமாக, பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் குறையும். கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் மற்றும் ஈகோலை கிருமியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக் கப்படும் தீவனம் மற்றும் குடிநீரில் ஈகோலை கிருமியின் தாக்கம் உள்ளதா? என கண்டறிந்து அதற்கு தகுந்தாற்போல் மேலாண்மை முறைகளை கையாள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story