மழையினால் இடிந்து விழுந்த பாபநாசம் அரசு பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மழையினால் இடிந்து விழுந்த பாபநாசம் அரசு பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாபநாசம்,
பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் பாபநாசம் பகுதியில் பெய்த பலத்த மழையினால் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.
தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மின் கம்பிகளில் மரங்களும் சாய்ந்து ஏற்பட்ட மின்தடையை உடனடியாக மின்சாரத்துறையினர் சீரமைத்தனர். இந்தநிலையில் பாபநாசம் பேரூராட்சி சுகாதார துறை ஊழியர்களும் மழைத்தண்ணீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சீரமைத்தனர்.
தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதியில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தநிலையில் பாபநாசத்தில் பெய்த பலத்த மழையினால் இந்த பள்ளியில் உள்ள விளையாட்டு மைதான சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. எனவே இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை உடனே சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story