மும்பை மாநகராட்சி நிதி உதவியால் பெஸ்ட் நிர்வாகம் ரூ.531 கோடி கடனை அடைத்தது


மும்பை மாநகராட்சி நிதி உதவியால் பெஸ்ட் நிர்வாகம் ரூ.531 கோடி கடனை அடைத்தது
x
தினத்தந்தி 24 Aug 2019 4:00 AM IST (Updated: 24 Aug 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சியின் நிதி உதவியால் பெஸ்ட் நிர்வாகம் ரூ.531 கோடி கடனை அடைத்து உள்ளது.

மும்பை, 

மும்பை மாநகராட்சியின் நிதி உதவியால் பெஸ்ட் நிர்வாகம் ரூ.531 கோடி கடனை அடைத்து உள்ளது.

மாநகராட்சி உதவி

மும்பையில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பெஸ்ட் குழுமம் மின்வினியோகம் மற்றும் நகரப் பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் அதிகளவு கடன் மற்றும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும் பெஸ்ட் நிர்வாகத்துக்கு நிதி உதவி அளிக்க மும்பை மாநகராட்சி முன்வந்தது.

இதில் பெஸ்ட் நிர்வாகம் கடனை அடைக்க மாநகராட்சி ரூ.1200 கோடி நிதி உதவி அளிக்கும் என சமீபத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரவின் பர்தேஷி அறிவித்து இருந்தார்.

ரூ.531 கோடி கடன்

இந்தநிலையில் கமிஷனர் அறிவித்தது போல மாநகராட்சி முதல் கட்டமாக பெஸ்ட் நிர்வாகத்துக்கு ரூ.665 கோடி வழங்கி உள்ளது. இதையடுத்து பெஸ்ட் ரூ.531 கோடி கடனை அடைத்து உள்ளது. இதுகுறித்து பெஸ்ட் பொது மேலாளர் சுரேந்திரகுமார் பட்கே கூறியதாவது:-

“மாநகராட்சியிடம் இருந்து நிதி உதவி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை வைத்து அதிக வட்டி செலுத்தி வந்த ரூ.531 கோடி கடனை அடைத்து உள்ளோம்.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.52 கோடி வட்டி செலுத்தி வந்தது மிச்சமாகி உள்ளது. தற்போது பெஸ்ட் பஸ் பயணிகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டி உள்ளது. பெஸ்ட்டின் நிலை மாறி வருகிறது. இன்று (சனிக்கிழமை) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக பெஸ்ட் ஊழியர்கள் அறிவித்து உள்ளனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட கூடாது”.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story