மாவட்ட செய்திகள்

தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Youth committed suicide by hanging

தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தண்டலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கார்த்திக் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.


இதை அறிந்த அவரது தாயார் பச்மையம்மாள் ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த கார்த்திக் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பச்சையம்மாள் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
2. ராயப்பேட்டை வணிக வளாகத்தில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு தம்பியை காப்பாற்றியவருக்கு நேர்ந்த சோகம்
ராயப்பேட்டை வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மயங்கி விழுந்த தம்பியை காப்பாற்றிய வாலிபர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
3. காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது
நாகூர் அருகே காரில் கடத்தப்பட்ட 1,920 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
4. திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் உடல்தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபர் கைது
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடந்த காவலர் உடல் தகுதி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. முகநூல் உதவியால் 12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் மீட்பு பெற்றோரிடம் ஒப்படைப்பு
12 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான வாலிபர் முகநூல் உதவியால் மீட்கப்பட்டார். நேற்று அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.