வேப்பந்தட்டை, குன்னம், மங்களமேடு பகுதிகளில், முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்


வேப்பந்தட்டை, குன்னம், மங்களமேடு பகுதிகளில், முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 24 Aug 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை, குன்னம், மங்களமேடு பகுதிகளில் முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா தொண்டப்பாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தமிழக முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். வருவாய் அதிகாரி சர்மிளா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர். முடிவில் கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் நன்றி கூறினார். இதேபோல் உடும்பியம், பெரியவடகரை, அரும்பாவூர், பூலாம்பாடி ஆகிய வருவாய் கிராமங்களிலும் முதல்- அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் 170 மனுக்கள் பெறப்பட்டு ஒப்புகை ரசீது வழங்கப்பட்டது.

இதேபோல் குன்னம் தாலுகா பகுதியான நன்னை கிழக்கு மாற்றும் மேற்கு பகுதி, வயலப்பாடி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி திருமாந்துறை, லப்பைக்குடிகாடு பேரூராட்சி 1 மற்றும் 2 வார்டு பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் மொத்தம் 158 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெறப்பட்ட மனுக்களுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி தீர்வு வழங்கப்படும். நன்னை கிராமத்தில் மண்டல துணை வட்டாட்சியர் சுரேஷ் தலைமையிலும், ஓலைப்பாடி கிராமத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் மாலதி தலைமையிலும், ஓலைப்பாடி கிராமத்தில் வட்ட வழங்கல் அலுவலர் கதிர் தலைமையிலும், லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தார் சின்னத்துரை தலைமையிலும் மனுக்கள் பெறப்பட்டது.

மங்களமேட்டை அடுத்துள்ள லெப்பைக்குடிக்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற முகாமிற்கு குன்னம் வட்ட சமூக நல தாசில்தார் சின்னதுரை தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் வேப்பூர் வட்டார துணை வேளாண்மை அலுவலர் அசோகன், கிராம நிர்வாக அதிகாரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சின்னசாமி தலைமையிலும், திருமாந்துறை ஊராட்சியில் வட்ட வழங்கல் அலுவலர் கதிர் தலைமையிலும் முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அதிகாரி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story