மாவட்ட செய்திகள்

கடந்த 4 மாதங்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி - அதிகாரி தகவல் + "||" + For those registered in the Labor Welfare Rs.8 Crore Funded

கடந்த 4 மாதங்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி - அதிகாரி தகவல்

கடந்த 4 மாதங்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி - அதிகாரி தகவல்
கரூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தோருக்கு ரூ.8½ கோடி நிதியுதவி என தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கரூர்,

தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின்கீழ் தொழி லாளர்களுக்கு 16 நலவாரியங்கள் அமைத்து அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டோர் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்து உள்ளனர். தொழிலாளர் நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது வாரிசு தாரர்களுக்கு கல்வி, திருமணம், உதவித்தொகை, இயற்கை மரணம்-விபத்து மரணம் உதவித்தொகை மற்றும் பதிவு செய்து 60 வயது பூர்த்தியான தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

2019-20-ம் நிதியாண்டில் (கடந்த 4 மாதங்களில்) கரூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் 3,857 பேருக்கு நிதியுதவியாக ரூ.4 கோடியே 5 லட்சத்து 68 ஆயிரத்து 700-ம், அமைப்புசாரா தொழிலாளர்கள் 6,204 பேருக்கு நிதியுதவியாக ரூ.4 கோடியே 38 லட்சத்து 97 ஆயிரத்து 950-ம், அமைப்புசாரா ஓட்டுனர் நலவாரியத்தில் 183 பேருக்கு நிதியுதவியாக ரூ.8 லட்சத்து 68 ஆயிரமும் வழங்கப்பட்டு உள்ளது.

இதை தவிர பதிவு செய்து 60 வயது பூர்த்தியான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அரசு நலத்திட்ட உதவிகளை பெறும் வகையில் அனைத்து வட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே கட்டுமானம், அமைப்புசாரா, ஓட்டுனர் தொழி லாளர்கள் அதிகளவு உறுப் பினராக சேர்ந்து, அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ராகுல்காந்தி அறிவித்துள்ள நிதியுதவி ரூ.72 ஆயிரம் வங்கி கணக்கில் சேர்ந்துவிடும் சிவகங்கையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராகுல்காந்தி அறிவித்துள்ள ஏழை, எளியோருக்கான ரூ.72 ஆயிரம் நிதியுதவி பயனாளிகளின் வங்கி கணக்கில் வந்து சேர்ந்துவிடும் என்றும், நம் கைக்கு வருமா? வராதா? என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்