மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார் + "||" + young men caught who cut the elderly woman at home alone and took jewelry

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,

மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருபவர் சுந்தரம்மாள்(வயது 60). இவர் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் அவரது வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சுந்தரம்மாள் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறிக்க முயன்றார். ஆனால் மூதாட்டி நகையை பறிக்கவிடாமல் திருடனுடன் போராடினார்.


இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் கத்தியால் மூதாட்டியை வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து நகையை பறித்துவிட்டு அந்த வாலிபர் தப்பினார். உடனே மூதாட்டி மாடியின் வெளிபகுதியில் நின்று திருடன், திருடன் என்று கூச்சல் போட்டார். அந்த சத்தம் கேட்டு சாலையில் சென்ற பொதுமக்கள் மாடிப்படி வழியாக வெளியே வந்த திருடனை பிடிக்க முயன்றனர்.

அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தன்னை பிடிக்க முயன்றால் கத்தியால் குத்தி விடுவதாக கூறி அங்கிருந்து தப்பியோடினார். அப்போது அவ்வழியாக ஒருவர், துணிச்சலாக சென்று அந்த வாலிபரை விரட்டி சென்று பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நகை பறித்தவரிடம் விசாரித்த போது, அவர் செல்லூர் பகுதியை சேர்ந்த சுந்தரவேல்(35) என்பது தெரியவந்தது. பின்னர் மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர வேலை கைது செய்தனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து தனியாக இருந்த மூதாட்டியிடம் நகையை பறித்து தப்பிச்செல்ல முயன்ற வாலிபர் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவர் கைது
ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
2. ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சாவு; 4 பேர் கைது
ஈரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் டெல்லியில் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்கள்
திருச்சி சிறப்பு முகாமில் இருந்து தப்பிய நைஜீரிய வாலிபர் டெல்லியில் கைதானது எப்படி? என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
4. கோவையில், ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 3 ரவுடிகள் கைது - கத்தி, வீச்சரிவாள்கள் பறிமுதல்
கோவையில் கத்தி, வீச்சரிவாள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய மேலும் 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
5. ஓசூர் அருகே துணிகரம்; காவலாளி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
ஓசூர் அருகே காவலாளி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.