கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா


கலை பண்பாட்டுத்துறை சார்பில் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 24 Aug 2019 10:37 PM IST)
t-max-icont-min-icon

கலை பண்பாட்டுத்துறை சார்பில் பரதம், ஓவியம், நாடகம், நாதஸ்வரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஆண்டு தோறும் மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி பரத கலைஞருக்கான கலை இளமணி விருதை ஜோஷிதாஸ்ரீ பெற்றார். ஓவிய கலைஞருக்கான கலை வளர்மணி விருதை ஐஸ்வர்யா என்பவர் பெற்றார்.

நாடக கலைஞருக்கான கலை நன்மணி விருதை அ.ஈஸ்வரன் பெற்றார். கிராமிய பாடகர் இளையராஜா கலைசுடர்மணி விருதையும், நாதஸ்வர கலைஞர் கன்னையா கலையமுது மணி விருதையும் பெற்றனர்.

இவர்களுக்கான விருதினையும், ரொக்க பரிசையும் கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார். விழாவில் மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி மற்றும் கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story