பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
பெண்ணின் செல்போனில் படத்தை திருடியதுடன் அவரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் கும்பரம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண், தனது செல்போனை பழுது நீக்குவதற்காக ரெகுநாதபுரத்தில் உள்ள சுரேஷ் என்ற சூர்யகுமார்(வயது 23) என்பவரது கடையில் கொடுத்திருந்தாராம். அப்போது சுரேஷ் அந்த செல்போனில் இருந்து அந்த பெண்ணின் சில படங்களை திருடியதுடன் அவரிடம் அதை காண்பித்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். பிறகு எதற்கு எங்களை போன் செய்து வரச்சொன்னாய் என்று கேட்டு அந்த பெண் வைத்திருந்த கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் சுரேஷ் மற்றும் அவரது நண்பர் சோமசுந்தரம் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.

அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க திட்டமிட்டனர். இதன்படி அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியவர்களை வழுதூர் விலக்கு சாலைக்கு வரும்படி கூறுமாறு தெரிவித்துள்ளனர். அவ்வாறே அந்த பெண் சுரேசிடம் கூற அவரும், அவரது நண்பர் ராமநாதபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம்(48) என்பவரும் வழுதூர் விலக்கு ரோட்டிற்கு வந்து காத்திருந்தனர். பின்பு அந்த பெண் வந்ததும் அவர்கள் பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். பிறகு எதற்கு எங்களை போன் செய்து வரச்சொன்னாய் என்று கேட்டு அந்த பெண் வைத்திருந்த கைப்பையில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் மற்றும் போலீசார் சுரேஷ் மற்றும் அவரது நண்பர் சோமசுந்தரம் ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story