திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை திரளான பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூரில் ஆவணி திருவிழா: சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 25 Aug 2019 3:30 AM IST (Updated: 25 Aug 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழாவில் சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குடவருவாயில் தீபாராதனை

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மாலையில் சாயரட்சை தீபாராதனை நடந்தது.

இரவில் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீசுவரர் கோவில் பிரதான வாயில் அடைக்கப்பட்டது. அங்கு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளினர். பின்னர் பிரதான வாயில் திறக்கப்பட்டவுடன், சுவாமி-அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கீழ ரத வீதி பந்தல் மண்டப முகப்பில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு எதிர்சேவை தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று...

6-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் கோ ரதத்தில் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா வருகிறார். இரவு 8 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி தேரிலும், வள்ளி அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி, எட்டு வீதிகளிலும் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Next Story