அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
அரிமளம் அருகே மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், ஒணாங்குடி கிராமத்தில் வேணுகோபால் சுவாமி கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதுக்கோட்டை-அரிமளம் சாலையில் நடைபெற்றது. பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவாக போட்டி நடைபெற்றது. போட்டியை அரிமளம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கடையக்குடி திலகர் தொடங்கி வைத்தார்.
பெரிய மாடு பிரிவில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை ஒணாங்குடி எல்லா புகழ் இறைவனுக்கே அப்துல்லா மாட்டு வண்டியும், 2-வது பரிசை வைரவேல் வீரமுனி ஆண்டவர் மாட்டு வண்டியும், 3-வது பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ. அம்பாள் மாட்டு வண்டியும், 4-வது பரிசை ஒணாங்குடி முருகன் மாட்டு வண்டியும் பெற்றன.
பரிசு
நடுமாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை ஒணாங்குடி கணேசன்பாண்டி மாட்டு வண்டியும், 2-வது பரிசை அரிமளம் லாளக்காரர் சாகுல் மாட்டு வண்டியும், 3-வது பரிசை பொய்கைவயல் முத்துகருப்பர் மாட்டு வண்டியும், 4-வது பரிசை கே.புதுப்பட்டி கே.ஏ.அம்பாள் மாட்டு வண்டியும் பெற்றன.
சின்ன மாடு பிரிவில் 30 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இந்த போட்டி இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது. இப்போட்டியில் முதல் பரிசுகளை கோவில்வாசல் வேணுகோனார், சிங்கவனம் ஜமீன்ராஜா மாட்டு வண்டிகளும், 2-வது பரிசுகளை பெரியகோட்டை மகாதேவிசெல்வம், கே.புதுப்பட்டி மாங்குடிசாத்தையா மாட்டு வண்டிகளும், 3-வது பரிசுகளை மாவிளங்களவயல் முருகானந்தம், ஒணாங்குடி எல்லா புகழ் இறைவனுக்கே அப்துல்லா மாட்டு வண்டிகளும், 4-வது பரிசுகளை காரியப்பட்டி துரைராஜ்தேவர், கே.புதுப்பட்டி அருண்அய்யனார் மாட்டு வண்டிகளும் பெற்றன.
இதைதொடர்ந்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஒணாங்குடி பொதுமக்கள், இளைஞர்கள், நகரத்தார்கள், விழா கமிட்டியினர், நேதாஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story