நீர் மேலாண்மை பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு


நீர் மேலாண்மை பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நீர் மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

க.பரமத்தி,

க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை கிழக்கு ஊராட்சி, மாலைக்கோவிலில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நீர் மேலாண்மை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகளை மத்திய குழுவினர் வைத்தீஸ்வரன், கிருஷ்ணாரெட்டி, சார்லஸ்கென்னடி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயந்திராணி, பழனிக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் பெரியசாமி, சரவணன், உதவி பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story