ராயக்கோட்டையில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை -உதவி கலெக்டர் விசாரணை
ராயக்கோட்டையில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் சஞ்சய். இவருடைய மனைவி சர்மிளா (வயது 27). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சர்வின் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது சர்மிளா 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்தநிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. இதன் காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சர்மிளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராயக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சர்மிளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சர்மிளாவுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலை சம்பவம் தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன் விசாரணை நடத்தி வருகிறார். கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story