கள்ளநோட்டு மாற்ற முயன்ற கேரள வாலிபர் கைது


கள்ளநோட்டு மாற்ற முயன்ற கேரள வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2019 3:15 AM IST (Updated: 25 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கள்ளநோட்டு மாற்ற முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்,

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அமர்ஷா (வயது 23). இவர், தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கினார். இதற்காக அவர் 200 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அந்த ரூபாய் நோட்டுகள் மீது வியாபாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அமர்ஷாவை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொடுத்தது கள்ள ரூபாய் நோட்டுகள் என்று தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமர்ஷாவை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story