ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டையில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அதிகாரி சேதுராமன், ஊத்தங்கரை தாசில்தார் இந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்னபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், மோட்டுபட்டி கூட்டுறவு சங்க தலைவர் தேவேந்திரன், நிலவள வங்கி தலைவர் சாகுல்அமீது, கூட்டுறவு சங்கத்தலைவர் சிவானந்தம், வீட்டுவசதி சங்கத்தலைவர் வேங்கன், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகா மாருபள்ளி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைஅரசன் தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் அருள்கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் வினோத்குமார், ராஜசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story